Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

அரிகண்டம் நடுகல்

Arikandam hero stone

அமைவிடம்

சோழவந்தான் அருகே உள்ள தென்கரையின் சிவன் கோவிலின் முன்புறம் உள்ளது.


அளவு

உயரம் 3.00 அடி, அகலம் 1.23 அடி


கல்வெட்டுகள்

இல்லை


ஊர்

தென்கரை

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
பொது ஆண்டு 15ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இந்த சிற்பம் ஒரு நடுகல் சிற்பமாகும். இது ’அரிகண்டம்’ எனப்படும் காணிக்கை செலுத்தி இறந்தவருக்காக எடுக்கப்பட்ட நடுகல்லாகும். தன் தலையைத் தானே அறுத்து, தன் உயிரைக் கொற்றவைக்கு (பெண் தெய்வம்) காணிக்கையாக செலுத்தும் இந்த வழக்கமே அரிகண்டம் எனப்படும். இந்த சிற்பத்தில் காணப்படும் வீரன், தன் வலதுக்கையில் கூர்மையான வாளைத் தன் கழுத்தை நோக்கி பிடித்துள்ளான். பொதுவாக அரிகண்ட நடுகற்களில் உள்ள வீரர்கள் தங்கள் மறுகையால் தங்கள் தலையை இழுத்துபிடித்திருப்பர். வீரன் தன் இடுப்பில் குறுவாள் போன்ற ஆயுதத்தை வைத்துள்ளான். வீரனின் சிற்ப அமைப்பை வைத்து பார்க்கும்போது இது நாயக்கர் காலத்தைச் சேர்ந்த பொது ஆண்டு 15-16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல்லாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. போரில் தனது நாடு வெற்றி பெறவேண்டும் என்றெண்ணிய வீரன் ஒருவன் கொற்றவைக்குத் தன்னைப் பலிகொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 48.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்