அமைவிடம்
ஊரணிக்கும் சமயக்கருப்பு கோயிலுக்கும் இடையில் உள்ள சாலை ஓரம் உள்ளது.
வழிபாடு
ஆடு பலியிட்டு, வாழைப்பழம், தேங்காய், சூடம், பத்தி போன்றவை படைத்து வழிபடுகின்றனர்.
கதை
இந்நடுகல் புடைப்பு சிற்பத்தை பற்றி ஒரு செவிவழிக் கதை இவ்வூர் மக்களால் சொல்லப்படுகிறது. காரான், காராத்தி என்ற கணவன், மனைவி இராமநாதபுரம் கடலாடி கிராமத்தை விட்டு இராஜக்காப்பட்டியில் வந்து குடியேறினர். குடியேறிய ஊரில் கண்மாய் மடையை பராமரிக்கும் வேலையை செய்து வந்தனர். ஒரு சமயம் மழைக்காலத்தில், மடை உடையும் நிலை ஏற்பட்டதால் அதை அடைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த இவர்கள் இறந்து விடுகின்றனர்.
ஊரின் நன்மைக்காக உயிர் நீத்த இவ்விருவருக்கும் சமயக்கருப்பு கோயில் அருகில் இந்த நடுகல் அமைக்கப்பட்டு வழிபடப்பட்டு வருகிறது என சொல்லப்படுகிறது.
ஊர்
எருமார்பட்டி
மாவட்டம்
மதுரை