Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

நடுகல்

Hero stone

அமைவிடம்

குரு பகவான் கோயிலுக்குச் செல்லும் வழியில் சாலையோரத்தில் அமைந்துள்ளது.


வழிபாடு

வழிபாட்டில் உள்ளது


கல்வெட்டுகள்

இல்லை


ஊர்

குருவித்துறை

மாவட்டம்

மதுரை

காலம் / அரசன்
வரலாற்றுக் காலம்
கூடுதல் விவரங்கள்
நீளமான கல்லில் செதுக்கப்பட்டுள்ள இந்த நடுகல் இரண்டு அடுக்குகளாக பிரிக்கப்பட்டு புடைப்புச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. மேலடுக்கில் இரண்டு பெண்கள் நின்ற நிலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளனர். கீழ் அடுக்கில் இடது பக்கம் ஒரு பெண் மற்றும் வலது பக்கம் ஒரு ஆண் நின்ற நிலையில் சித்தரிக்கப்பட்டுள்ளனர். இந்த நடுவில் சிற்பம் ஒரு சதுர வடிவ பீடத்தின் மேல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடுவில் சுமார் பொது ஆண்டு 16 - 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
அளவு
சுமார் 3 அடி உயரம்
தகவல்

முனைவர் மகாலிங்கம்

குறிப்புகள்
தென் கல்லக நாட்டில் நடுகற்கள், அருண் பேக்காமன், பக்கம் 126.
புகைப்படங்கள்

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி

P.பிரியதர்ஷினி