Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

ஒரு பெண்ணுக்காக எடுக்கப்பட்ட நடுகல்

Hero stone erected for a woman

அமைவிடம்

விருமாண்டி கோயிலுக்கு முன்புறம் உள்ளது.


அளவு

உயரம் 3.9 அடி, அகலம் 2.9 அடி


வழிபாடு

அம்பட்டையம்பட்டியில் உள்ள குறிப்பிட்ட சிலர் தை, மாசி, ஆடி மாதங்களில் வரும் முக்கிய நாட்களில் இந்நடுகல்லை வழிபட்டு வந்தனர்.


ஊர்

பூசாரிபட்டி

மாவட்டம்

மதுரை

கதை
திடியன் அருகேயுள்ள அம்பட்டையம்பட்டி என்னும் கிராமத்தில் வாழ்ந்து இறந்த ஒரு பெண்ணுக்காக, அவ்வூரிலே இந்த நடுகல் வைக்கப்பட்டிருந்தது என சொல்லப்படுகிறது. இந்த நடுகல்லை குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டும் வழிபட்டு வந்தனர். பின் இந்த நடுகல் தெய்வத்திற்கு சரியான முறையில் வழிபாடு செய்ய முடியவில்லை (கொண்டு செலுத்த முடியவில்லை) என்பதால், அம்பட்டையம்பட்டியில் இருந்த இந்த நடுகல்லை பூசாரிபட்டியில் உள்ள விருமாண்டி கோயிலுக்கு மாற்றி வைத்துவிட்டு இங்கு வந்து வழிபட்டனர். இவ்வூரில் வைத்து வழிபட்ட பின் குடும்பத்தில் நல்ல நிகழ்வுகள் ஏதும் நடைபெறவில்லை என்பதால் தற்போது பரமரிப்பின்றி இருப்பதாக ஊர்மக்கள் தெரிவிக்கின்றனர்.
காலம் / அரசன்
பொது ஆண்டு 16 ஆம் நூற்றாண்டு
கூடுதல் விவரங்கள்
இது அம்பட்டையம்பட்டியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்காக எடுக்கப்பட்ட நடுகல் புடைப்புச் சிற்பமாகும்.
தகவல்

அருண் பேக்காமன் மற்றும் முனைவர் இரத்தினகுமார்

குறிப்புகள்
அருண் பேக்காமன், தென்கல்லக நாட்டில் நடுகற்கள், பக்கம் 85,86.
புகைப்படங்கள்

அருண் பேக்காமன்