Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

இலட்சுமி நாராயண பெருமாள் கோயில்

Lakshmi Narayana Perumal Temple

அமைவிடம்

காரியாபட்டியில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில், 5 கிலோ மீட்டர் தொலைவில், தோப்பூரில் உள்ளது.


மூலவர் பெயர்

இலட்சுமி நாராயணர்


பூசைக்காலம்

காலை 6 மணிக்கும், மாலை 6 மணிக்கும் கோயில் திறந்திருக்கும்.


ஊர்

தோப்பூர்

மாவட்டம்

விருதுநகர்

திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி மற்றும் பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தேங்காய், பழம், நறுமணப்பொருட்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவை படைக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
நாயக்கர் காலக் கோயிலாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சுவரோவியம்
முன்மண்டபத்தில் தற்காலச் சுவரோவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
விளக்குத்தூணில் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.
தல வரலாறு / கதைகள்
சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பே தோப்பூரில் சிறு சிறு கோயில்கள் இருந்ததாகவும், அந்தக் காலத்தில் இவ்வூரைச் சேர்ந்த சடைக்கிழவன் என்பவர் அந்த கோயில்களில் பூசைகள் செய்து வந்ததாகவும் கூறப்படுகிறது. பின்னர், கோயில்களின் எண்ணிக்கை அதிகரித்ததாலும், கோயிலுக்கு சென்று திரும்பும் வழியில் காட்டாறு வழியாக செல்ல வேண்டியிருந்ததாலும், அனைத்துக் கோயில்களையும் தனியாக கவனிப்பது சாத்தியமாக இல்லாமல் போனது. இதனால், சடைக்கிழவன் கோயில்களின் பூசைகளை பிறர்களிடம் பிரித்துக் கொடுத்து ஒவ்வொரு கோயிலிலும் வழிபாடு நடைபெறுமாறு ஏற்பாடு செய்தார். நாயக்கர் காலத்தில் இக்கோயில் கட்டப்பட்டு இருக்கலாம் என்று இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
கோயில் அமைப்பு
கருவறையுடன் கூடிய முன் மண்டபம் காணப்படுகிறது. விளக்கேற்றும் தூணும் துளசி மாடமும் இடம்பெற்றுள்ளன.
கூடுதல் விவரங்கள்
கருவறையின் வெளிப்பகுதியில் உள்ள விளக்குத்தூணின் கீழ்ப்பகுதியின் நான்கு புறமும் சங்கு, சக்கரம், ஆஞ்சநேயர் மற்றும் கைகூப்பிய ஒருவரும் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளனர். இச்சிற்பங்களுக்கு மேல் நாகபந்தம் போன்ற அமைப்பும் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
மந்தையம்மன் கோயில், விநாயகர் கோயில், அடைக்கலம் காத்த ஐயனார் கோயில்.
செல்லும் வழி
காரியாபட்டியிலிருந்து திருச்சுழி செல்லும் சாலையில் 5 கிலோ மீட்டர் தொலைவில் தோப்பூர் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காரியாபட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
காரியாபட்டி
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.