Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பள்ளிகொண்ட பெருமாள் கோயில்

Pallikonda Perumal Temple

அமைவிடம்

பாலவநத்தத்திலிருந்து கோட்டூர் செல்லும் வழியில் உள்ளது.


தலத்தின் சிறப்பு

300 ஆண்டுகளுக்கு மேலாக இப்போது வரை மலைப்பட்டி ஊர்மக்களும், சுற்றுவட்டார ஊர்மக்களும் தொடர்ந்து வழிபட்டு வருகின்றனர்.


மூலவர் பெயர்

பள்ளிகொண்ட பெருமாள்


ஊர்

மலைப்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

தல மரம்
உதியமரம்
பூசைக்காலம்
இருகாலப் பூசை நடைபெறும் (காலை, மாலை).
திருவிழாக்கள் விவரங்கள்
சனிக்கிழமை தோறும் சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. வைகுண்ட ஏகாதசி, இராமநவமி, பௌர்ணமி, சங்கடஹர சதுர்த்தி ஆகிய நாட்களில் சிறப்புப் பூசைகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
வழிபாட்டில் பூ, பழம் ,தேங்காய் வாசனைத் திரவியங்கள், பொங்கல் ஆகியவை படைக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
பள்ளிகொண்ட பெருமாள், மகாலட்சுமி, கருடன், பாலவிநாயகர், ஹயக்ரீவர், தன்வந்திரி, பிரசன்ன ஆஞ்சநேயர் ஆகியோரின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
இக்கோயிலில் காணப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சிற்பம் இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணியில் உள்ள பெருமாள் கோயிலில் பிரதிஷ்டை செய்வதற்காக உருவாக்கப்பட்டதாக இப்பகுதி மக்கள் கூறுகின்றனர். அக்காலத்தில் இங்கிருந்து சிற்பம் செய்ப்பட்டு, ராணி மங்கம்மாள் சாலையின் வழியாகக் கொண்டு செல்லும்போது, இம்மலையின் அடிவாரத்தில் வைத்திருக்கின்றனர். அப்போது சிறிய சேதம் ஏற்பட்ட காரணத்தினால் சிற்பத்தை அக்கோயிலுக்கு அனுப்ப முடியவில்லை. ஆகையால் ஒரு சிறிய பள்ளிகொண்ட பெருமாள் சிற்பத்தை உடனடியாகச் செய்து அனுப்பி வைத்ததாகவும், சேதமான இந்தச் சிற்பத்தை இங்கேயே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. பிற்காலத்தில் மலைப்பட்டி ஊர்மக்கள் இச்சிற்பத்தை எடுத்து வைத்துக் கோயிலமைத்து இன்று வரை வழிபட்டு வருகின்றனர்.
கோயில் அமைப்பு
கருவறை, சிறு சந்நிதிகள், குன்றின்மேல் செல்லப் படிக்கட்டுகள், வழிபாட்டு மண்டபம் மற்றும் நுழைவாயிலில் சுதைச் சிற்பங்களூடன் கூடிய வளைவு ஆகியன காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலில் காணப்படும் பள்ளிகொண்ட பெருமாள் சிற்பம் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் நாயக்கர் காலத்தில் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. கருவறையின்மேல் இரண்டுதள விமானம் காணப்படுகிறது. இப்போது பல்வேறு பகுதிகளில் இருந்து இக்கோயிலை வழிபடப் பக்தர்கள் வருகின்றனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

குறிப்புகள்
விருதுநகர் மாவட்ட வரலாறு
அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
கோட்டூர் குருசாமி கோயில்
செல்லும் வழி
பாலவநத்தத்திலிருந்து கோட்டூர் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அருப்புக்கோட்டை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
அருப்புக்கோட்டை
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்