Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

வீரபெருமாள் கோயில்

Veeraperumal Temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

வீரபெருமாள்


அமைவிடம்

வல்லக்கனத்தம் என்ற ஊர் அருகில் உள்ளது.


தலத்தின் சிறப்பு

இக்கோயிலை வல்லக்கனத்தம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பத்து ஊர்களைச் சேர்ந்தவர்கள் வழிபடுகின்றனர். சுமார் ஐந்து தலைமுறைகளாக இவர்கள் இவ்விடத்தில் கோயிலமைத்து வழிபட்டு வருகின்றனர்.


ஊர்

சிந்துவம்பட்டி

மாவட்டம்

விருதுநகர்

மூலவர் பெயர்
வீரபெருமாள்
திருவிழாக்கள் விவரங்கள்
மாசி மாதத்தில் ஒரு நாள் களரித் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பூ, பழம், தேங்காய், வாசனைத் திரவியங்கள், பொங்கல் போன்றவை படைக்கப்படுகின்றன. வீரப்பெருமாளுக்கு பலியிடப்படுவதில்லை. ஆனால், இக்கோயிலில் உள்ள கருப்பசாமிக்கு ஆடு பலியிடப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
வீரபெருமாள் மற்றும் கருப்பசாமி.
கோயில் அமைப்பு
கருவறை, வழிபாட்டு மண்டபம் ஆகியன உள்ளன. வெளிமண்டபத்தில் கருப்பசாமி சந்நிதி காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
காடு போன்ற பகுதியில் அமைந்துள்ள இந்த வீரபெருமாள் கோயில் அண்மைக்காலக் கட்டடமாக இருப்பதால், இங்குள்ள கருவறையின் மேல் குவிமாடம் போன்ற விமானம் காணப்படுகிறது. கருவறையின் வெளியே துவாரபாலர் இருவர் வழிபாட்டு மண்டபத்தில் உள்ளனர்.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
செல்லியாரம்மன் கோயில், ராஜாபட்டி.
செல்லும் வழி
சாத்தூரிலிருந்து இருக்கன்குடி செல்லும் சாலையிலிருந்து பிரிந்து காட்டுப்பாதையில் வல்லக்கனத்தம் என்ற ஊர் அருகில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
சாத்தூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
சாத்தூர்
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்