Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பன்னதகிரீசுவரர் குடைவரை கோயில்

Pannathagiriswarar Rock-cut Temple

கோயிலின் வேறு பெயர்

அருள்மிகு வெள்ளியம்பலநாதர் திருக்கோயில்


தலத்தின் சிறப்பு

இக்குடைவரை மேற்கு முகமாக அமைந்துள்ளது சிறப்பாகும்.


கோயில் குளம்/ஆறு

குடைவரையின் பின்புறம் குளம் உள்ளது.


ஊர்

பாறைக்குளம்

மாவட்டம்

விருதுநகர்

திருவிழாக்கள் விவரங்கள்
அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம் போன்ற நாட்களில் சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
காலம்/ ஆட்சியர்
முற்காலபாண்டியர் காலம்
கல்வெட்டு / செப்பேடு
பன்னதகிரீஸ்வரர் சிவலிங்கத்திற்கு ’திருச்சுழியல் பிரளய விடங்கர்’ என்றும், ’சுழியல் பிரளயவிடங்கர்’ என்றும் பிற்கால பாண்டிய காலத்தில் அழைக்கப்பட்டு வந்துள்ளது என்று கோயிலில் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மண்டபத்தில் காணப்படும் கல்வெட்டு தெரிவிக்கிறது. இக்கல்வெட்டு பிற்காலக் கட்டுமானங்களால் மறைக்கப்பட்டுள்ளது.
சிற்பங்கள்
ஒரு பெண் தெய்வத்தின் சிலையும் விநாயகர் சிலையும் குடைவரை நுழைவாயிலின் இருபுறமும் காணப்படுகின்றன. இரண்டு நந்தி சிலைகளூம் ஒரு விநாயகர் புடைப்புச்சிற்பமும் இக்கோயிலில் உள்ளன.
கோயில் அமைப்பு
சதுரமான கருவறையைக் கொண்ட இக்குடைவரையில் முன்மண்டபம் உள்ளது. சிவலிங்கத்தில் சதுரமான ஆவுடையார் உள்ளது. இக்குடைவரை மேற்கு முகமாக அமைந்துள்ளது. பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டில் மண்டபம் கட்டப்பட்டிருக்கிறது. மேலும் இக்குடைவரை அமைந்துள்ள பாறையின் மேல் படிநிலை கனசதுர அடுக்குகள் (stepped pyramidal structure) கொண்ட விமானம் ஒன்று பிற்காலத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது.
கூடுதல் விவரங்கள்
இக்குடைவரைக்குள் தாய்ப்பாறையில் அமைக்கப்பட்ட சிவலிங்கம் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இக்கோவிலுக்கு அருகில் ஒரு பாறையில் அரைக்கும் கல் காணப்படுகிறது
புகைப்படங்கள்

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.

காணொலி

முனைவர் ரா.தாமரைக்கண்ணன்.