Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பள்ளிகொண்ட பெருமாள் கோயில்

Pallikonda Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

வடகலைப் பெருமாள் கோயில்/ சயனப் பெருமாள் கோயில்


அமைவிடம்

மேல்மங்கலம் கிராமத்தில் கீழத்தெரு சாவடி தெருவில் உள்ளது.


மூலவர் பெயர்

பள்ளிகொண்ட பெருமாள்


ஊர்

மேல்மங்கலம்

மாவட்டம்

தேனி

கோயில் குளம்/ஆறு
வராக நதி
ஆகமம்
கோயில் கட்டும் பொழுது பஞ்சராத்ர ஆகமம் பின்பற்றப்பட்டு இருப்பதகவும், வழிபாட்டில் வைகானச ஆகமம் பின்பற்றப்படுவதாகவும் சொல்லப்படுகிறது.
பூசைக்காலம்
ஒரு கால பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதேசி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் புரட்டாசி மாதம் வரும் நவராத்திரி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதைத் தவிர பெருமாளுக்கு உகந்த நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 12- 13ம் நூற்றாண்டு.
கல்வெட்டு / செப்பேடு
கோயில் மகா மண்டபத்தில் உள்ள தூண்களில் ஏழு துண்டு கல்வெட்டிகள் காணப்படுகின்றன. கல்வெட்டுகளில் இக்கோயிலுக்கு நிலங்கள் தானமாக கொடுக்கப்பட்ட செய்திகள் வெட்டப்பட்டுள்ளன. இக்கல்வெட்டுகளில் மேல் நெடுங்கல நாடு என்றும், இவ்வூர் ஒரு பிரம்மதேயம் என்றும், ஊருக்கு ’முடி வழங்கும் பாண்டிய சதுர்வேதி மங்கலம்’ என்ற பெயர் இருந்தது என்றும் வெட்டப்பட்டிருக்கிறது. பொது ஆண்டு 1924 ஆம் ஆண்டில் இவ்வூர் மக்கள் இணைந்து இக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தியுள்ளதை கோயிலில் உள்ள மற்றொரு தமிழ் கல்வெட்டு குறிப்பிடுகிறது. இதில் ‘ ஓம் சாலிவாகன சகாப்த்தம் ௲அ௱௪௰எக்கு ரக்தாக்ஷி ௵ ஆவணி ௴ ௩௰க தீ , மேல்மங்கலம் மகாஜனங்கள், வகைய்றா கிராமத்தார்களால், ஜீரணோத்தாரணம் செய்யப்பட்டது 15.9.1924’.
சிற்பங்கள்
கோயிலின் தெற்கு பக்கம் விநாயகருக்கு தனி சன்னதியும், மகா மண்டபத்தில் லட்சுமி, யோக நரசிம்மர் மற்றும் ரெங்கநாயகி சிற்பங்களும், ராமானுஜர் மற்றும் அவருடைய சீடரான விக்னேஸ்வர ஆச்சாரியார், ஆஞ்சநேயர், நவகிரக சிற்பங்கள் மற்றும் திருவிழா காலங்களில் வழிபடப்படும் மரத்தால் செய்யப்பட்ட விலங்கு வாகன சிற்பங்களும் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
இக்கோயிலில் கருவறை, அர்த்தமண்டபம், மற்றும் 24 தூண்கள் கொண்ட மகா மண்டப அமைப்பும் காணப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
அருள்மிகு பள்ளிகொண்ட பெருமாள் கோயில் பகவான் விஷ்ணுவுக்காக எடுக்கப்பட்ட கோவிலாகும். இக்கோயில் கருவறையில் பெருமாள், ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் சயன கோலத்தில் காட்சி அளிக்கின்றார். பாண்டிய நாட்டை சோழர்கள் கைப்பற்றிய பின்பு, மன்னர் குலோத்துங்க சோழனால் இக்கோயில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், இதற்கான கல்வெட்டுச் சான்று தற்போது காணப்படவில்லை. கோயில் தூண்கள் பாண்டியர்களுடைய கட்டடக்கலை அம்சத்தை பெற்றிருக்கின்றன. தேவ கோட்டங்கள் இறை உருவங்கள் எதுவுமின்றி காணப்படுகின்றன. இகோயில் கருவறைக்கு மேல் கபோதப் பகுதியில் காணப்படும் கூடும் கும்ப பஞ்சாரமும் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டு அழகாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.
தகவல்

முனைவர் மாணிக்கராஜ்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
இவ்வூரில் நடுவில் நின்ற பெருமாள் கோயிலும், மாயா பாண்டீஸ்வரர் என்ற சிவன் கோயிலும் உள்ளன.
செல்லும் வழி
பெரியகுளத்தில் இருந்து ஜெயமங்களம் செல்லும் சாலையில் வடுகபட்டி என்ற கிராமத்திற்கு மிக அருகாமையில் மேல்மங்கலம் என்ற கிராமம் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேல்மங்கலம் பெரியகுளம் ஜெயமங்களம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
தேனி
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
பெரியகுளம் மற்றும் தேனி
புகைப்படங்கள்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்

ம.ரேவன்