Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பாம்பலம்மன் கோயில்

Pāmbalamman Temple

அமைவிடம்

மேலரத வீதியில் அமைந்துள்ளது.


தலத்தின் சிறப்பு

பழந்தமிழ் மக்களின் வழிபாடான நாகவழிபாடு பிற்காலத்தில் பெருந்தெய்வ வழிபாட்டுடன் இணைந்துவிட்டது, எனினும் விசக்கடிப்பட்டவர்கள் இக்கோயிலை வலம் வந்து தீர்த்தம் பருகும் வழக்கம் இன்றும் உள்ளது.


மூலவர் பெயர்

பாம்பலம்மன்


ஊர்

திருப்பரங்குன்றம்

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
தற்போது பூசைகள் நடைபெறுவது இல்லை
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
ஒற்றைக் கல்லால் ஆகிய இச்சிறு கோயிலைப் பாம்பலம்மன் என்று அழைக்கிறார்கள். இங்கு நாகதேவதை இருப்பதாகக் கூறுகிறார்கள். இப்பாம்பு வழிபாடு பற்றிய தகவல்களை இங்குள்ள சில நாட்டுப்புறப் பாடல்கள் தெரிவிக்கின்றன. இப்பாடல்கள் குறிப்பிட்ட வேளாண்குடி மக்களின் வழிபாட்டுத் தெய்வமாக, நாகர் விளங்கியதைக் காட்டுகின்றன. வேளாண்மை செய்யும் மக்கள் பெரிதும் பாம்புகளின் நடமாட்டத்தால் பாதிக்கப்படுவதால் அச்சத்தின் காரணமாக இவ்வழிபாடு பெரிதும் வளர்ந்திருக்க வாய்ப்புள்ளது. அம்மன் காப்பு, மஞ்சள் காப்பு, ஆற்றுத் தண்ணீர், குளத்துத் தண்ணீர், கோழி பலியிடுதல் ஆகியவை இவ்வழிபாட்டில் குறிப்பிடத்தக்க கூறுகளாக அமைந்துள்ளன.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன்மண்டப அமைப்பைக் கொண்ட கற்கோயில்.
கூடுதல் விவரங்கள்
கோயிலின் நுழைவாயிலில் முகப்பு வளைவு காணப்படுகிறது. கோயிலில் கருவறை மற்றும் முன்மண்டப அமைப்பு உள்ளது. பாம்பலம்மன் சிலை ஐந்து தலை நாகத்துடன் காணப்படுகிறது. கருவறையின் நுழைவாயிலின் மேற்பகுதியில் கஜலட்சுமி புடைப்புச் சிற்பம் காணப்படுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்
செல்லும் வழி
மேல ரத வீதிக்குச் செல்லும் பாதையில் அமைந்துள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை பன்னாட்டு விமான நிலையம்
தங்கும் வசதி
கோயில் செல்லும் பாதையில் மேல ரத வீதியில் தங்கும் விடுதிகள் உள்ளன
புகைப்படங்கள்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்

முனைவர் கண்ணன்