Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பட்டாபிராமர் திருக்கோயில்

Pattābirāmar Temple

கோயிலின் வேறு பெயர்

பெருமாள் கோயில்


அமைவிடம்

திருப்பரங்குன்றம் அருகே உள்ள விளாச்சேரியில் அமைந்துள்ளது. இந்த இடம் வேதம் மற்றும் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் குறிப்பிடத்தக்கது.


தலத்தின் சிறப்பு

புனித கங்கை வடக்கிலிருந்து தெற்கு நோக்கிப் பாய்கிறது, வைகையாறும் தெற்கு நோக்கிப் பாய்வதால் இதைக் கங்கைக்குச் சமமாகச் சிலர் கருதுகின்றனர். வைகையில் நீராடிவிட்டுப் பட்டாபிராமரை வணங்குவது சிறப்பாகும். மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் நடக்கும் விழாவிற்கு, விளாமரங்கள் அதிகம் உள்ள இவ்வூரான விளாச்சேரியில் இருந்துதான் நெல் கொண்டு செல்லப்படுகிறது. அதனால் விளாச்சேரி என்று பெயர் பெற்றுள்ளது. விளாச்சேரி வேதம் மற்றும் தமிழ்ப் பண்டிதர்களுக்கும் முக்கிய இடமாகும்.


ஊர்

விளாச்சேரி

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
பட்டாபிராமர்
திருவிழாக்கள் விவரங்கள்
இக்கோயிலில் எந்த பாகுபாடு இன்றி ஒவ்வொரு தெய்வத்திற்கும் பல்வேறு காலங்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் இராமருக்குத் திருமஞ்சனத்தையும் துணிகளையும் காணிக்கையாகச் செலுத்துகின்றனர்.
கல்வெட்டு / செப்பேடு
பொது ஆண்டு 1903ஆம் ஆண்டு இக்கோயில் ஜீர்ணோத்தாரணம் (குடமுழுக்கு)செய்யப்பட்டுள்ளதாக இக்கோயில் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
சிற்பங்கள்
இங்கு கருடனும், ஆஞ்சநேயரும் துவாரபாலகர்களாக அருள்பாலிக்கின்றனர்.
கோயில் அமைப்பு
இக்கற்கோயிலில் சிறிய விமான அமைப்பு காணப்படுகிறது. கோயில் நுழைவாயில் வளைவை பட்டாபிசேக ராமர், கருடன் மற்றும் ஆஞ்சநேயர் சுதை சிற்பங்கள் அலங்கரிக்கின்றன.
சுருக்கம்
போரில் இராவணனைக் கொன்று சீதையைச் சிறையிலிருந்து மீட்டுத் தனுஷ்கோடி வழியாக அயோத்திக்குத் திரும்பினார் இராமர். அவரது முடிசூட்டு விழா அயோத்தியில் கொண்டாடப்பட்டது. அந்நிகழ்வைத்தான் இக்கோயிலில் காட்சிப்படுத்தியுள்ளனர். இராமர் தனது வலப்புறம் சீதையையும், இடப்புறம் இலட்சுமணனையும் கொண்டு அருள்பாலிக்கிறார். கருடனும், ஆஞ்சநேயரும் துவாரபாலகர்களாக உள்ளனர். இராமர் அயோத்தியில் பட்டாபிசேகத்தின் போது இவ்வாறுதான் காட்சியளித்தார் என்பது நம்பிக்கை. இக்கோயில் 1000 ஆண்டுகள் பழமையானதாக இப்பகுதி மக்களால் நம்பப்படுகிறது.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
விளாச்சேரியில் பட்டாபிராமர் கோயில் தவிர, விநாயகர், காசி விஸ்வநாதர்-விசாலாட்சி, மாமுண்டி ஐயன், கருப்புசாமி, அழகு நாச்சியார், தட்சிணாமூர்த்தி, ஐயனார், பூரண புஷ்கலா, ஆதிசிவன் ஆகியோருக்கும் கோயில்கள் உள்ளன.
செல்லும் வழி
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் இருந்து தெற்கே 9 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரியார் பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை நகரில் தங்கும் வசதிகள் உள்ளன
புகைப்படங்கள்

முனைவர் கண்ணன், ஆத்மநாதன்

முனைவர் கண்ணன், ஆத்மநாதன்

முனைவர் கண்ணன், ஆத்மநாதன்

முனைவர் கண்ணன், ஆத்மநாதன்

முனைவர் கண்ணன், ஆத்மநாதன்