Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கழுவநாதன் கோயில்

Kaluvanāthan temple

பிற தெய்வத்தின் பெயர்கள்

கழுவன், கழுவாயி, கழுவத்தேவன்


மூலவர் பெயர்

கழுவநாதர்


ஊர்

பூசாரிபட்டி

மாவட்டம்

மதுரை

கோயில் குளம்/ஆறு
சிறிய குளம் உள்ளது.
திருவிழாக்கள் விவரங்கள்
தை,மாசி, சித்திரை, பதினெட்டாம் பெருக்கு, கார்த்திகை ஆகிய நாட்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
மாசிப்பச்சைக்கு நாடகம் நடைபெறுகிறது. சிறப்பு வழிபாட்டின் போது 1 லட்சம் பேர் இங்கு கூடுகின்றனர். இங்கு பெட்டிகள் வைத்து பூசை செய்யும் வழக்கம் உள்ளது.
கோயில் அமைப்பு
இக்கோயில் கிழக்கு முகமாக அமைந்துள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் நுழைவாயிலில் கோயில் மணிகள், திரிசூலம், கொடிமரம், பலிபீடம் ஆகியவை காணப்படுகின்றன. இக்கோயிலின் முகப்பு பகுதியில் காமதேனு, நந்தி, பூதகணங்கள் மற்றும் பிற சுதைச் சிற்ப வடிவங்கள் காணப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமர் 300 ஆண்டுகள் பழமையான தலமாக கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
பூசாரிபட்டியில் உள்ள கழுமர வழிபாடே கழுவநாதர் வழிபாடாக மாறியதாக சிலர் தெரிவிக்கின்றனர். தற்காலத்தில் கழுவன், காசி விஸ்வநாதனாக குறிப்பிடுப்படுகிறார்.
தகவல்

முனைவர் இரத்தினகுமார்

அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருமாத்தூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
காமராசர் பல்கலைக்கழகம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
செக்கானூரணி
புகைப்படங்கள்

திரு. விஜய்

திரு. விஜய்

திரு. விஜய்