Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

அருள்மிகு வேணுகோபால சுவாமி திருக்கோயில்

Arulmighu Venugopala Swami Temple

கோயிலின் வேறு பெயர்

ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோயில்


அமைவிடம்

விருதுநகரிலிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் உள்ள கள்ளிக்குடியிலிருந்து பிரியும் ரோட்டில் 7 கி.மீ. தூரத்தில் குராயூர் உள்ளது.


தலத்தின் சிறப்பு

இந்த கோயிலில் வழிபட்டால் திருமணம், குழந்தை பாக்கியம், வியாபார தொழில்விருத்தி, குடும்ப அமைதி உண்டாகும் என்று நம்பப்படுகிறது.


ஊர்

குராயூர்

மாவட்டம்

மதுரை

மூலவர் பெயர்
வேணுகோபால சுவாமி
தல மரம்
புளியமரம்
பூசைக்காலம்
காலை 7 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரை வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
வைகுண்ட ஏகாதசி மற்றும் சனிக்கிழமைகளில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
கிராம மக்கள் விவசாய விளைநிலங்களில் கிடைக்கும் விளைபொருட்களை பெருமாளுக்கு காணிக்கையாக செலுத்துகின்றனர்.
சிற்பங்கள்
வேணுகோபால சுவாமி சந்நிதியின் எதிரில் பெரிய திருவடி கருடாழ்வாரும், கல்தூணில் சிறிய திருவடி ஆஞ்சநேயரும் உள்ளனர். விஸ்வக்சேனர், நம்மாழ்வார், ராமானுஜர் ஆகியோர், ஆழ்வார்கள் மேடையில் எழுந்தருளி உள்ளனர்.
கோயில் அமைப்பு
இங்கு கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம், ஆழ்வார்கள் மேடை மற்றும் நுழைவு வாயில் அமைப்புகள் காணப்படுகின்றன.
கூடுதல் விவரங்கள்
இக்கோயில் கருவறையில் புல்லாங்குழல் இசைக்கும் கோலத்தில் பாமா ருக்மணி சமேதராக வேணுகோபால சுவாமி எழுந்தருள்வது சிறப்பாகும். கோயில் நுழைவு வாயிலுக்கு அருகில் உள்ள கொடிமரத்தை இப்பகுதி மக்கள் “கம்பதடியன்” என்று அழைகின்றார்கள். இது பல குடும்பங்களுக்கு குலதெய்வமாகவும் உள்ளது.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 முதல் 1000 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இந்த கிராமத்தில் வடக்கை நோக்கி கோயில் கொண்டிருக்கும் ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி திருக்கோயில் மிகப் பழமை வாய்ந்த ஒன்றாகும். இக்கோயிலின் வரலாறு சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்தாக கருதப்படுகிறது. தென்காசியைத் தலைநகராகக் கொண்டு பொது ஆண்டு 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்னன் வீரபண்டியன் , பெருமாளுக்கு ஒரு கோயில் எழுப்ப விரும்பினான். ஒரு சமயம் அவன் மதுரையை நோக்கிச் செல்லும்போது, கள்ளிக்குடியை அடைந்த நேரத்தில் அவனுக்கு ஸ்ரீமந்நாராயணனின் நினைவு மனதில் எழுந்தது. இதை நாராயணனின் சித்தமாகவே உணர்ந்த அவன் நினைவு எழுந்த இடத்திலேயே பெருமாளுக்கு கோயில் அமைத்தான். அதன்பின் வீரபாண்டியன், பொன்னின் பெருமாள், பராக்கிரம பாண்டியன் ஆகியோர் கோயிலை விரிவுபடுத்தினர் என்பது செவி வழி செய்தி.

நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் வரும் ஸ்ரீ வேணுகோபாலனக்கு உகந்த “குரா” மலர்கள் இப்பகுதியில் முன்பு கிடைத்ததால் இவ்வூர் குராயூர் என்று அழைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஊரில் 100 வருடத்திற்கு முன்பு அக்கிரஹாரம் ஒன்று இருந்தாகவும், அதில் 99 அந்தனர் குடும்பங்கள் மட்டுமே இருந்ததாலும், நூற்றுக்கு ஒரு குடும்பம் குறைந்ததால் “குறை ஊர்” என்றழைக்கப்பட்டு பின்பு மருவி குராயூர் என்றானது என்கின்றனர் வேறு சிலா்.
தகவல்

முனைவர் ஆத்மநாதன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி திருக்கோயில்
செல்லும் வழி
மதுரைலிருந்து 40 கி.மீ. தூரத்திலும் விருதுநகர்லிருந்து சுமார் 22 கி.மீ தூரத்தில் கள்ளிக்குடி. இங்கிருந்து பிரியும் ரோட்டில் 1 கி.மீ. தூரத்தில் குராயூர் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குராயூர் மற்றும் கள்ளிக்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை , திருப்பரங்குன்றம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
திருப்பரங்குன்றம் மற்றும் மதுரை
புகைப்படங்கள்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

முனைவர் ஆத்மநாதன்

காணொலி

முனைவர் ஆத்மநாதன்