Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

முத்தாலம்மன் கோயில்

Muthālamman Temple

கோயிலின் வேறு பெயர்

மந்தையம்மன் கோயில்


அமைவிடம்

காவனூர் ஊர் மந்தை


மூலவர் பெயர்

முத்தாலம்மன்


ஊர்

காவனூர்

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்

செவ்வாய் மற்றும் வெள்ளி கிழமைகளில் வழிபாடு நடைபெறும்.

வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்

முத்தாலம்மன் கோயில் திருவிழா அன்று காலையில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு மாலையில் அந்த சிலை அழிக்கப்படுகிறது.

சிற்பங்கள்
முத்தாலம்மன் கோயிலில் காவனூர் மட்டுமில்லாமல் தென் தமிழகத்தில் பல இடங்களில் பரவலாக காணப்படுகிறது. ஆனால் அவை எதிலுமே முத்தாலம்மனுக்கு சிலை வைக்கப்பட்டிருக்காது. மண்டபம் போன்ற அமைப்பில் பீடம் மட்டும் காணப்படும்.
கோயில் அமைப்பு

ஊர் மந்தையில் சிறிய மண்டபம் போன்ற அமைப்பில் பீடம் மட்டும் காணப்படுகிறது. மண்டபத்தின் மேல் பகுதியில் பூதகணங்கள், நந்தி மற்றும் பிற உருவ சிற்பங்களைக் கொண்ட கோயில் விமானம் போன்ற அமைப்பு உள்ளது.

கூடுதல் விவரங்கள்

முத்தாலம்மன் அல்லது மந்தை அம்மன் என்ற பெயரில் தென் தமிழகத்தில் பல இடங்களில் கிராம கோயிலாக இந்த நாட்டுப்புற தெய்வம் அமைந்துள்ளது. முத்தாலம்மன் சக்தி மிகுந்த கிராம தெய்வமாக இவ்வூர் மக்களால் கருதப்படுகிறார். நோய் நொடி தீர, குழந்தை பாக்கியம் பெற முத்தாலம்மனுக்கு வேண்டுதல் வைக்கின்றனர்.

முத்தாலம்மனுக்கென தனி கோயில் சிலை எதுவும் கிடையாது. முத்தாலம்மன் கோயில் திருவிழா அன்று காலையில் முத்தாலம்மன் சிலை செய்யப்பட்டு அன்று மாலையே அந்த சிலை அழிக்கப்படுகிறது. அன்றே பிறந்து அன்றே அழியும் அம்மனாக முத்தாலம்மன் விளங்குவதால் கிராம மக்கள் அனைவரும் ஒன்றாக கூடி இந்த திருவிழாவை நடத்துவது வழக்கம்.

தகவல்

முனைவர் துர்கா தேவி

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்

விநாயகர் கோயில்

அருகிலுள்ள பேருந்து நிலையம்

காஞ்சரம் பேட்டை பேருந்து நிலையம்

அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்

மதுரை ரயில்வே நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

மதுரை விமான நிலையம்

புகைப்படங்கள்

சுசிலா

கேட்பொலி

சுசிலா