Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

செங்குண்டு ஐயனார் கோயில்

Sengundu Ayyanar Temple

கோயிலின் வேறு பெயர்

ஐயன் கோயில்


அமைவிடம்

ஊரின் மேற்குத் திசையில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

ஐயனார்


ஊர்

கல்லம்பட்டி

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
சில ஆண்டுகளாக அன்றாடப் பூசை நடைபெறுவதில்லை.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதத்தில் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
குதிரை எடுப்பு மற்றும் முளைப்பாரி முக்கிய சடங்குகளாகும்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 250 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகம் முழுவதும் சுடுமண்ணால் செய்யப்பட்ட குதிரைகள், காவல் தெய்வங்கள், விநாயகர், சப்த கன்னிமார்கள், நாகர் மற்றும் சாஸ்தா சிலைகள் காணப்படுகின்றன.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன் மண்டபம் கொண்ட கோயில்
கூடுதல் விவரங்கள்
ஆறு தூண்கள் கொண்ட முகமண்டபத்துடன் இக்கோயில் அமைக்கப்பட்டுள்ளது. கருவறையில் ஐயனார் மற்றும் இரு பெண் தெய்வங்கள் காட்சிப்படுத்தப் பட்டுள்ளனர். குதிரை எடுப்புத் திருவிழாவின் போது செய்யப்பட்ட அனைத்துக் குதிரைகளும் மற்றும் நேர்த்திக்கடனாகச் செய்யப்பட்ட பிற சுடுமண் சிலைகளும் இவ்வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அண்மைக் காலங்களில் கோயிலுக்கு அன்றாடப் பூசைகள் நடைபெறுவது இல்லை. இது பதினெட்டுப் பட்டிக்குச் சொந்தமான கோயிலாகும். இங்கு அனைத்துச் சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வழிபடுகின்றனர்.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரைக் கோயில்
செல்லும் வழி
மதுரை - திருச்சி நெடுஞ்சாலை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

காணொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

கேட்பொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்