Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

இளமைநாயகி அம்மன் கோயில்

Ilamaināyaki Amman Temple

கோயிலின் வேறு பெயர்

ஊராளும் நாயகி, இளமநாச்சி கோயில்.


அமைவிடம்

ஊரின் வடமேற்கு திசையில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

இளமநாயக்கி அம்மன்


ஊர்

அரிட்டாபட்டி

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
குறிப்பிட்ட பூசைக்காலம் கிடையாது.
திருவிழாக்கள் விவரங்கள்
ஐப்பசி மாதம் திருவிழா நடைபெறும். அப்போது தெய்வ வழிபாடு சார்ந்த கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
முளைப்பாரியுடன் ஊர்வலம் வருதல், பால் குடம் எடுத்தல், எட்டு நாட்கள் தானானா மற்றும் கும்மி கொட்டுதல் போன்ற வழிபாட்டு முறைகள் உள்ளன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 500 வருடம் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சுவரோவியம்
காவல் தெய்வங்களின் ஓவியங்கள் காணப்படுகின்றன.
சிற்பங்கள்
காவல் தெய்வங்கள், பூதகணங்கள்
தல வரலாறு / கதைகள்
இக்கோயிலில் வணங்கப்படும் இளமைநாயகி அம்மன் என்பவர், செல்லியம்மன் மற்றும் பட்டத்தரசியம்மன் ஆகிய இருவருக்கும் மூத்தவராகக் கருதப்படுகிறார். இளமைநாயகி அம்மனுக்கு பிள்ளை பேரு இல்லை. ஒரு சமயம் அவர் தன் சகோதரிகளின் பிள்ளைகளை பார்க்கச் சென்றுள்ளார். அப்போது, அவர்கள் பிள்ளை பேரு இல்லாத இளமைநாயகியை, தங்கள் பிள்ளைகளை பார்க்க விடாமல் தடுத்ததால், அவர்களை இளமைநாயகி கல்லாக போகும்படி சபித்துவிட்டாராம்.

மற்றொரு சமயம், பொங்கல் செய்வதற்காக ஊரில் உள்ள கல்மண்டபத்தில், கல்லால் கத்திரிக்காய் காய்க்கச் செய்து ஊர் மக்களை அதிசயத்தில் ஆழ்தியதால் இவருக்கு ’கல்லால் கத்திரிக்காய் காய்தத இளமநாயச்சியம்மன்’ என்ற பட்டமும் உண்டு. இதுவே, இந்த தெய்வத்தின் சிறப்பு என்று ஊர்மக்கள் செவிவழிச் செய்திகளின் அடிப்படையில் தெரிவிக்கின்றனர்.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் எட்டு தூண்கள் கொண்ட முகமண்டப அமைப்பையுடைய அண்மைக்காலக் கோயில் ஆகும்.
சுருக்கம்
இப்பகுதியிலுள்ள ஐந்து கிராமங்களின் காவல் தெய்வமாக இந்த இளமைநாயகி அம்மன் திகழ்கிறார். இவர் இளமநாயகி/ இளமநாச்சி என்றும் குறிப்பிடப்படுகிறார். இளமைநாயகி அம்மன் கருவறையில் பீடத்தின் மேல் கற்சிற்பமாக அமர்ந்தவாறு காட்சியளிக்கிறார். இக்கோயில் வளாகத்தில் பலிபீடம், ஜுவாலா பைரவர், விநாயகர் மற்றும் நாகர் சிலைகள் காணப்படுகின்றன. மேலும் கோயிலுக்கு அருகில் உள்ள மண்டபத்தில் வெற்றி கோப்பைகள் மற்றும் பதக்கங்களும் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

இக்கோயில் திருவிழாவின் பொழுது முளைப்பாரி போடப்படுகிறது. அவை கோயிலுக்கு கொண்டு வந்து வைக்கப்படுகின்றன. பின்பு அன்றிலிருந்து எட்டு நாட்களுக்கு தினமும் இரவில் பாட்டிசைத்து, தானானா மற்றும் கும்மியடித்து ஊர் மக்கள் ஆடி மகிழ்கின்றனர். கோயிலில் முளைப்பாரி வைக்கப்பட்ட அடுத்த நாள் பக்கத்து ஊரிலிருந்து மக்கள், 100க்கும் மேற்பட்ட பால்குடங்களை இங்கு கொண்டு வந்துவைத்து, வழிபடுவதாக கூறப்படுகிறது.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
அரிட்டாபட்டி குடைவரை கோயில்
செல்லும் வழி
மதுரை -மேலூர் நெடுஞ்சாலை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மேலூர்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

காணொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்

கேட்பொலி

நொ.ராஜசோழன், சே.ராஜேஷ்