Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கன்னிமார் கோயில்

Kannimar Temple

கோயிலின் வேறு பெயர்

கன்னிமார் தெய்வம்


மூலவர் பெயர்

கன்னிமார்


பூசைக்காலம்

செவ்வாய் மற்றும் வெள்ளி ஆகிய இரு நாட்களும் காலை 8.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை வழிபாடு நடைபெறும்.


ஊர்

செந்துறை

மாவட்டம்

திண்டுக்கல்

திருவிழாக்கள் விவரங்கள்
ஆண்டுதோறும் ஆடிமாதப் பெளர்ணமி அன்று திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
பக்தர்கள் தங்கள் வேண்டுதல் நிறைவேறியவுடன் சூலம் வடித்து வைத்து வழிபாடு செய்கின்றனர்.
கோயில் அமைப்பு
இக்கூரையில்லா கோயிலில் ஒரு கல்லின் மேல் உலோகத்தினால் ஆன சூலம் வைக்கப்பட்டுள்ளது. இங்கு கல்லால் ஆன சூலமும் வழிபடப்படுவதாக சொல்லப்படுகிறது.
கூடுதல் விவரங்கள்
கன்னிமார் கோயில் என்று அழைக்கப்படும் இக்கோயிலில் ஒரு சூலம் மட்டுமே வழிபடப்படுகிறது. இவ்வூரைச் சேர்ந்த குறிப்பிட்ட சிலர் இங்கு வழிபடுகின்றனர். இந்த தெய்வத்திடம் கோரப்படும் வேண்டுதல்கள் அந்த வருடமே நிறைவேறிவிடும் என்று அவர்கள் நம்புகின்றனர். அவ்வாறு வேண்டுதல் நிறைவேறியவுடன் சூலம் வடித்து வைத்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
தகவல்

முனைவர் முத்தையா

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பச்சநாச்சியம்மன் கோயில்
செல்லும் வழி
நத்தம் வழியாக செந்துறை செல்லலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செந்துறை
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
அய்யலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
புகைப்படங்கள்

மூ. சேகர்

மூ. சேகர்