Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

அனுமந்த பெருமாள் ஆலயம்

Anumantha Perumal Temple

கோயிலின் வேறு பெயர்

வரத அனுமந்த பெருமாள் கோயில்


அமைவிடம்

கானப்பாடி கிராமத்தின் மேற்கு புறத்தில் பிரசித்தி பெற்ற பட்டாளம்மன் ஆலயத்தின் அருகில் உள்ளது.


மூலவர் பெயர்

அனுமந்த பெருமாள்


ஊர்

கானப்பாடி

மாவட்டம்

திண்டுக்கல்

காலம்/ ஆட்சியர்
சுமார் 300 ஆண்டுகள் பழைமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
முன்பு, கல் கொடிமரத்தில் கல்வெட்டு ஒன்று இருந்துள்ளது என்றும், சுண்ணாம்பு அடித்ததால் எழுத்துக்கள் சரிவர தெரியவில்லை என்றும், அதில் மானியமாக நிலம் வழங்கப்பட்ட செய்தி பொறிக்கப்பட்டு இருந்தது என்றும் இப்பகுதி மக்கள் கூடுகின்றனர்.
சிற்பங்கள்
கல் கொடிமரத்தில்/ கம்பத்தில் கருடன், அனுமன், சங்கு மற்றும் சக்கரத்தின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
சுருக்கம்
சிறிய ஆலயம் அமைக்கப்பட்டு, இங்கு அனுமந்தபெருமாள் என்று அழைக்கப்படும் அனுமன் போல் உள்ள பெருமாள் புடைப்புச் சிற்பம் மூலவராக வழிபடப்படுகிறது. இச்சிற்பத்தில் காணப்படும் பெருமாளுக்கு பெரிய மூக்கு, வாய் மற்றும் நீளமான வால் காணப்படுகிறது. இதனாலேயே இச்சிற்பத்திற்கு அனுமந்தபெருமாள் என்ற பெயர் வந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனினும் இவர் கையில் கதை இல்லை. இவர் கிரீடம், குண்டலம், மாலை, தோல்வளை, கடக வளை மற்றும் கைவளை அணிந்துள்ளார். சுமார் மூன்றடி உயரம் கொண்ட இக்கற்சிற்பம் நாயக்கர் காலத்தை சார்ந்ததாக இருக்கலாம் என்றும், இது பால முத்து நாயக்கர் கால சிற்பம் என்றும் இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அனுமந்த பெருமாள் சிற்பத்தின் எதிரில் காணப்படும் கற்கொடிமரத்தில்/ கம்பத்தில் கருடன், அனுமன், சங்கு மற்றும் சக்கரத்தின் புடைப்புச் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தகவல்

முனைவர் முத்தையா

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பட்டாளம்மன் ஆலயம்
புகைப்படங்கள்

சீ.தாமோதரன்

சீ.தாமோதரன்

சீ.தாமோதரன்

காணொலி

சீ.தாமோதரன்