Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

முருகன் கோயில்

Murugan Temple

அமைவிடம்

பழைய இ.மலம்பட்டி எனும் ஊரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

முருகன்


பூசைக்காலம்

ஊரின் மையப்பகுதியில் உள்ளதால் எந்நேரமும் மக்கள் வழிபட்டுச் செல்கின்றனர்.


ஊர்

இ.மலம்பட்டி

மாவட்டம்

மதுரை

திருவிழாக்கள் விவரங்கள்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும், கார்த்திகை தீபம் அன்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
விளக்கேற்றி, தேங்காய் உடைத்து, பத்தி மற்றும் சூடம் ஏற்றி வழிபடுவர்.
காலம்/ ஆட்சியர்
பொது ஆண்டு 19ஆம் நூற்றாண்டு
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
படிகளுடன் அமைக்கப்பட்டுள்ள மண்டபம் போன்ற அமைப்பில், ஒரே ஒரு பீடம் அமைந்துள்ளது. அப்பீடத்தின் மேல் முருகனின் வேலாயுதமும் அதன் இருபுறங்களிலும் சிறிய கல் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன.
கூடுதல் விவரங்கள்
மண்டபம் போன்ற அமைப்பினுள் முருகனுக்குரிய, உலோகத்தால் ஆன, வேலாயுதமும், அதன் இருபுறங்களிலும் சிறிய கல் தூண்கள் வைக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் உள்ள கல் தூண் சிறியதாகவும் வலது பக்கம் உள்ள கல் தூண் பெரியதாகவும் காணப்படுகிறது. படிக்கட்டுகளின் இருபுறங்களிலும் பீடத்தின் மேல் ஒற்றை அரிவாள் நட்டு வைக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான முருகன் கோயில்களில் முருகப்பெருமான் சிலை வடிவில் வழிபடப் படுகிறார். ஆனால் இங்கு அவரின் வேலாயுதம் மட்டுமே வழிபடப்படுவது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இக்கோயிலில் வேறு சிற்பங்கள் ஏதும் இல்லை. கோயிலின் முன்பு பல உலோக மணிகள் கட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நெவுலிநாதர் கோயில்
செல்லும் வழி
மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இ.மலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மேலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்