Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

உச்சினிமாகாளி அம்மன் கோயில்

Uchinimākāli Amman Temple

கோயிலின் வேறு பெயர்

அம்மன் கோயில்


அமைவிடம்

புது இ.மலம்பட்டி எனும் கிராமத்தின் மையத்தில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

உச்சினி மாகாளி அம்மன்


ஊர்

இ.மலம்பட்டி

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
தினமும் இரண்டு வேளை பூசை நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளிலும்; பங்குனி, சித்திரை மற்றும் ஆடி மாதங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இக்கோயில் திருவிழாக்காள் மிகவும் கோலாகலமாகக் கொண்டாடப்படுகின்றன.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
தினந்தோறும் மக்கள் பத்தி மற்றும் சூடம் ஏற்றி வழிபடுகின்றனர். தங்கள் வேண்டுதல் நிறைவேறியதும் நேத்திக்கடன் செலுத்துகின்றனர்.
காலம்/ ஆட்சியர்
சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
கோயில் வளாகத்தில் விநாயகர், சிம்மம் போன்ற சிற்பங்களும் விமானத்தின் மேல் மனிதர்கள், தெய்வங்கள், பூதகணங்கள் மற்றும் சிம்மங்களின் சுதை சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயிலின் நுழைவு வளைவில் அம்மன், கிருஷ்ணர், விநாயகர், முருகன் மற்றும் பூதகணங்களின் சிற்பங்கள் காணப்படுகின்றன.
தல வரலாறு / கதைகள்
மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள உச்செயினியைத் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்து வந்த விக்கிரமாதித்த ராஜாவின் குலதெய்வமான உச்செயினி மாகாளியே தமிழகத்தில் உச்சி மாகாளி/உச்சினி மாகாளி என்று அறியப்படுவதாக ஒரு கருத்து உள்ளது. மேலும் இவர் சிவனின் தலை உச்சியில் இருந்து பிறந்து அரக்கர்களை வதம் செய்ததாகவும் சொல்லப்படுகிறது.
கோயில் அமைப்பு
கருவறை மற்றும் முன் மண்டபம் கல்லால் கட்டப்பட்டுள்ளது. இதற்கு முன் பகுதியில் நீளமான மண்டப அமைப்பும் உள்ளது.
கூடுதல் விவரங்கள்
இக்கோயிலின் கருவறையில், அம்மன் உச்சினிமாகாளி ஒரு பீடத்தின் மேல் வீற்றிருக்கிறார். அவருக்கு நான்கு கரங்கள் உள்ளன. அவற்றில் உடுக்கை, திரிசூலம் போன்ற ஆயுதங்களை ஏந்தியுள்ளார். இவரது தலை சுடர் முடி போன்ற தலை அலங்காரத்துடன் காணப்படுகிறது. கருவறைக்கு வெளியே அம்மனை நோக்கி படி சிம்மத்தின் சிற்பமும் பலி பீடமும் அமைக்கப்பட்டுள்ளன. இவர் மிக சக்திவாய்ந்த தெய்வமாகவும், கிராம மக்களின் நம்பிக்கைக்குரிய தெய்வமாகவும் கருதப்படுகிறார்.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
நெவுலிநாதர் கோயில்
செல்லும் வழி
மேலூரிலிருந்து திருப்பத்தூர் செல்லும் வழியில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
இ.மலம்பட்டி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மேலூர்
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்