Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

பரவை முத்துநாயகி அம்மன் திருக்கோயில்

Paravai Muthunāyaki Amman Temple

மூலவர் பெயர்

முத்துநாயகி அம்மன்


தல மரம்

வேப்பமரம், இட்சிமரம்


கோயில் குளம்/ஆறு

கோயில் குளம்


ஊர்

பரவை

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
காலை 5 மணி மற்றும் மாலை 7 மணிக்கு கோயில் திறகப்படும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம், 18 நாட்கள் உற்சவம் நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
இங்கு நேர்த்திக்கடனாக குழந்தை பொம்மை வாங்கி வைக்கும் வழிபாட்டு முறை கடைபிடிக்கப்படுகிறது. திருவிழாவின் பொழுது அம்மன் சிலை ஊர் சாவடியில் வைக்கப்பட்டு நாடகம் நடத்தப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
கோபுரம், மகா மண்டபம், முன் மண்டபம் மற்றும் கருவறை அமைப்பு உள்ளது. இதைத் தவிர கோயில் குளம் மற்றும் சந்நதிகள் அமைந்துள்ளன.
கூடுதல் விவரங்கள்
இது சுயம்பு கோயிலாக தோன்றியதாக ஊர் மக்கள் நம்புகின்றனர். இவ்வூரில் அமைந்துள்ள முக்கிய கோயில் இதுவாகும். இதனை மையமாகக் கொண்டுதான் ஊரிலுள்ள மற்ற கோயில்கள் உருவாகியுள்ளன என்றும் கூறப்படுகிறது.

கோயில் நுழைவாயிலின் வலப்பக்கம், ஒரு பீடத்தின் மேல் பல மனித பொம்மைகள் மற்றும் இறை உருவ சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் வேண்டுதல் பெயரில் நேர்த்திக்கடனாக செலுத்தப்பட்டவையாகும். கோயில் வளாகத்தில் நாகர் மற்றும் விநாயகர் சிற்பங்களும் காணப்படுகின்றன. மேலும் கோயிலில் உள்ள ஒரு மரத்தில் குழந்தை பாக்கியம் வேண்டி தொட்டில்கள் மற்றும் துணிகள் கட்டப்பட்டுள்ளன.கோயில் வளாகத்தில் வாள் மற்றும் நீளமான துப்பாக்கி ஏந்திய ஒருவரின் புடைப்புச் சிற்பமும் வைக்கப்பட்டுள்ளது. இது நடுகல் சிறப்பாக இருக்கலாம்.
தல வரலாறு / கதைகள்
இவ்வூர் உருவான காலத்தில், ஊர் வாசி ஒருவர் விவசாயம் செய்து கொண்டிருந்தாராம். அவர் மண்வெட்டியால் நிலத்தை தோண்டியபோது ஒரு சிலை தென்பட்டதாம். அந்த சிலையே தற்போது முத்துநாயகி அம்மனாக கருதப்பட்டு வழிபடப்படுகிறது என ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

அருகிலுள்ள பேருந்து நிலையம்
மதுரை பேருந்து நிலையம்
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி

கேட்பொலி

M. ராஜேஸ்வரி