Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

கற்குடைய அய்யனார் கோயில்

Karkudaiya Ayyanar Temple

அமைவிடம்

கொட்டக்குடியிலிருந்து பனங்காடி செல்லும் வழியில் இடைப்பட்ட குறுக்கு சாலையிலிருந்து மேற்குமுகமாக அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

கற்குடைய அய்யனார்


கோயில் குளம்/ஆறு

இக்கோயிலுக்கு அருகில் மிகப் பெரிய கண்மாய் உள்ளது.


ஊர்

கொட்டக்குடி

மாவட்டம்

மதுரை

பூசைக்காலம்
காலை மற்றும் மாலை என இருவேளையும் வழிபாடு நடைபெறுகிறது.
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரை மாதம் திருவிழா நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
நேர்த்திக்கடனாக, மொட்டை அடித்தல், காது குத்துதல், புரவியெடுத்தல் போன்ற வழிபாட்டு சடங்குகள் செய்யப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
சிற்பங்கள்
அய்யனார், பூரணை, புஷ்கலை, பூதகணங்கள், குதிரைகள், கருப்பசாமி, பட்டக்கருப்பசாமி, கருப்பாயி, சின்ன கருப்பு, பெரியகருப்பு, அக்னி வீரன் சாமி, துவாரபாலகர்கள், அடியவர், மாடக் கருப்பு, தொட்டிச்சி, பாம்பாட்டி, முத்துக்கருப்பு, அகோர வீரபத்திரன், ராக்காயி, ரெண பத்தரகாளியம்மன், சங்கிலிவீரன், நொண்டிக்கருப்பு போன்ற தெய்வங்களின் சிற்பங்கள் உள்ளன. இவர்களை பந்தி தெய்வங்கள் என்று அழைக்கின்றனர்.
கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கியுள்ள இக்கோயிலில் கருவறை மற்றும் முன்மண்டப அமைப்பு காணப்படுகின்றன. இதைத்தவிர கோயில் வளாகத்தில் தனித்தனி பீடங்களில் பல பந்தி தெய்வங்கள் அமைந்துள்ளன.
கூடுதல் விவரங்கள்
கோயிலின் நுழைவாயிலில் சிற்பத்துடன் அலங்கரிக்கப்பட்ட நுழைவு வளைவு காணப்படுகிறது. மிகப் பெரிய இக்கோயில் வளாகத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பெரிய யானை, குதிரை மற்றும் இரண்டு பூதகணங்களின் சிற்பங்களும் காணப்படுகின்றன. கோயில் கருவறையின் மேல் ஒற்றை அடுக்கு விமானம் காணப்படுகிறது. கிராம மக்கள் வருடத்திற்கு ஒருமுறை மிகக் கோலாகலமாகக் இங்கு புரவியெடுப்பு திருவிழாவை கொண்டாடுகின்றனர்.
தகவல்

முனைவர் மருதுபாண்டியன்

அருகிலுள்ள வரலாற்றுச் சின்னங்கள்
பெருமாள் கோயில், பனங்காடி.
செல்லும் வழி
கொட்டக்குடியிலிருந்து பனங்காடி செல்லும் வழியில் வலது புற சாலையில் சிறிது தூரம் கண்மாய்க் கரையோரமாக பயணம் மேற்கொண்டால் இவ்விடத்தை அடையலாம்.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொட்டக்குடி
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை
தங்கும் வசதி
மதுரை
புகைப்படங்கள்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்

முனைவர்.மீ.மருது பாண்டியன்