Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

மந்தையம்மன் கோயில்

Manthai Amman Temple

கோயிலின் வேறு பெயர்

காளியம்மன்


அமைவிடம்

ஊர் மந்தையின் நடுவில் அமைந்துள்ளது.


மூலவர் பெயர்

மந்தை அம்மன்


ஊர்

பிள்ளையார் நத்தம்

மாவட்டம்

மதுரை

தல மரம்
வேப்பமரம்
கோயில் குளம்/ஆறு
கண்மாய்
பூசைக்காலம்
செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் பூசைகள் நடைபெறும்.
திருவிழாக்கள் விவரங்கள்
புரட்டாசி மாதம் 11 நாள் சிறப்பு வழிபாடு நடைபெறும்.
வழிபாட்டுச் சடங்குகள் / முறைகள்
முளைப்பாரி போடுதல், உருண்டு கொடுத்தல் (அங்க பிரதட்சணம்), அக்கினி சட்டி எடுத்தல், கிடாய் வெட்டுதல் போன்ற வழிபாட்டுச் சடங்குகள் கடைபிடிக்கப்படுகின்றன.
காலம்/ ஆட்சியர்
சுமார் 200 வருடங்கள் பழமையானதாகக் கருதப்படுகிறது.
கல்வெட்டு / செப்பேடு
இல்லை
கோயில் அமைப்பு
சுமார் 5 அடி உயரம்கொண்ட ஒரு சிறிய மேடையின் மையப் பகுதியில், ஒரு பீடமும் மூன்று அடி உயரம் கொண்ட சூலாயுதமும் அமைக்கப்பட்டுள்ளன. இது ஒரு திறந்தவெளி கோயில்/ கூரை இல்லாகக் கோயில் ஆகும்.
சுருக்கம்
பொதுவாக, தமிழகத்தில் அம்மன் கோயில்கள் கிராமங்களின் புனிதத் தன்மையை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டும். இவ்வாறு அமைக்கப்பட்ட கிராமக் கோயில்கள் சிலவற்றில் இறை உருவங்கள் இல்லாமல், செதுக்கப்படாத கற்கள் ஊன்றப்பட்டிருப்பதைக் காணலாம். சில இடங்களில் சூலாயுதம் மட்டும் ஊன்றப்பட்டிருக்கும். அவ்வகையில், ஊர் மந்தையின் நடுவில் அமைந்துள்ள இந்த மந்தையம்மன் தெய்வத்திற்கு சிலை உருவம் கிடையாது. இக்கோயிலில் ஒரு பீடமும் மூன்று அடி உயரம் கொண்ட சூலாயுதமும் அமைக்கப்பட்டுள்ளன. கோயில் பீடத்தின் அருகில் சுமார் மூன்றடி உயரம் கொண்ட கந்து அமைக்கப்பட்டு, விளக்கேற்றி வழிபடப்படுகிறது. கோயில் வளாகத்தில் இரண்டு தூண்கள் அமைக்கப்பட்டு அவற்றின் இடையில் மணிகள் கட்டப்பட்டுள்ளன.
தகவல்

முனைவர் மகாலிங்கம்

செல்லும் வழி
சிறுவாழை பிரிவு, பிள்ளையார் நத்தம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
பெரிய பேருந்து நிறுத்தம், சிறு வாழை பிரிவு
அருகிலுள்ள தொடர்வண்டி நிலையம்
மதுரை தொடர்வண்டி நிலையம்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை விமான நிலையம்
புகைப்படங்கள்

M. ராஜேஸ்வரி

M. ராஜேஸ்வரி