Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

ஸ்ரீ வீரராகவப் பெருமாள் கோயில்

பிற தெய்வத்தின் பெயர்கள்

ஸ்ரீ கனகவல்லி தாயார்


அமைவிடம்

மதுரை நகரின் வண்டியூரில் அமைந்துள்ளது


மூலவர் பெயர்

ஸ்ரீ வீரராகவப் பெருமாள்


ஊர்

வண்டியூர்

மாவட்டம்

மதுரை

தல மரம்
வில்வமரம்
கோயில் குளம்/ஆறு
வைகை நதி
திருவிழாக்கள் விவரங்கள்
சித்திரைத் திருவிழா, இக்கோயிலின் சிறப்பையும், பக்தியின் ஆழத்தையும் வெளிப்படுத்தும் பெருநிகழ்வு.அந்த நாளில், கள்ளழகர் வைகை நதியின் வழியாக நாகவாகனத்தில் எழுந்தருளி,வண்டியூரில் இரவு தங்கி, வீரராகவப் பெருமாளைத் தரிசிக்கிறார்.மறுநாள் அதிகாலையில் ஏகாந்த சேவை நடைபெறும்.
பின்னர் பக்தர்களுக்குத் தரிசனம் அளித்து,கருட வாகனத்தில் புறப்பட்டு, ராமராய மண்டபம் வழியாக அழகர் கோயிலுக்குத் திரும்புகிறார். அன்றைய நாளில், மண்டூக முனிவரின் சிலை சிறப்பாக அலங்கரிக்கப்படுகிறது. இறைவனிடமிருந்து மாலை மற்றும் பரிவட்டம் பெறுவது சாபவிமோசன நிகழ்வின் ஒரு பகுதியாகும்.
சித்திரைத் திருவிழா, சித்திரா பௌர்ணமி, ஆடி பூரம், நவராத்திரி பண்டிகைகள் அனைத்தும் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன.

 

காலம்/ ஆட்சியர்
இக்கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
தல வரலாறு / கதைகள்
இக்கோயில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
இதனை விரிவுபடுத்தியவர் சொக்கப்ப நாயக்கர் எனத் தலவரலாறு கூறுகிறது.திருமலை நாயக்கர் காலத்தில்,காளையார் கோயிலுக்குச் செல்லும் வேட்டையாட்டுப் பயணத்தின் போது, வைகை நதிக்கரையில் கண்டெடுக்கப்பட்ட ஸ்ரீ வீரராகவப் பெருமாள் சிலை,இங்கே நிறுவப்பட்டதாக நம்பப்படுகிறது. இக்கோயில் தலபுராணத்தின்படி,துர்வாச முனிவரின் சாபத்திலிருந்து மண்டூக மகரிஷிக்கு
கள்ளழகர் இத்தலத்திலேயே சாபவிமோசனம் அளித்தார்.

 

கோயில் அமைப்பு
கிழக்கு நோக்கிய மூன்று நிலை ராஜகோபுரம் சுமார் 26 அடி உயரமுடையது.
கருவரைக்குச் செல்லும் மண்டபம்,அற்புதமான கலை நயமிக்க சிற்பங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.கருவறையில் ஸ்ரீ வீரராகவப் பெருமாள்,
ஸ்ரீதேவியுடனும் பூதேவியுடனும்,கிழக்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார் என்பது நம்பிக்கை.அஞ்சலி ஆஞ்சநேயர் சுவாமிக்குத் தனிச் சந்நிதி உள்ளது.
பெருமாளின் தசாவதாரங்கள் மரச் சிற்ப வேலைப்பாடுகளால் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன.ஸ்ரீ கனகவல்லி தாயார், தனிச் சன்னதியில் நின்ற கோலத்தில் காணப்படுகிறார்.சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் இருவரும் ஒரே சந்நிதியில் காட்சியளிக்கிறார்கள்.வெளிப்புறத்தில் நவக்கிரக சந்நிதி அமைந்துள்ளது.

 

தகவல்

க.த. காந்திராஜன்

காணொலி

தமிழ் இணையக் கல்விக்கழகம்