Tamil Virtual Academy Logo
பண்பாட்டு மின் நிலவரை
Digital Cultural Atlas of Tamil Nadu
Left Arrow

குலசேகரநல்லூர் வரலாறு

History of Kulasekaranallur

ஊரின் வரலாற்றுப் பெயர்

குலசேகர நல்லூர்


பெயர்க் காரணம்

இவ்வூர் முனியாண்டி கோவிலில் உள்ள கல்வெட்டில் பாண்டிய மன்னன் மாறவர்மன் குலசேகர பாண்டியனின் பெயரைக் குறிக்கும் விதமாக ’குலசேகர நல்லூர்’ என்று இந்த ஊரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் பொது ஆண்டு 1290 ஆகும். எனவே, இவ்வூர் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டிலிருந்து குலசேகர நல்லூர் என்று அழைக்கப்பட்டு வருவது தெளிவாகிறது.


வீடுகளின் எண்ணிக்கை

250


ஊர்

குலசேகர நல்லூர்

மாவட்டம்

விருதுநகர்

ஊரில் உள்ள சமூகங்களின் எண்ணிக்கை
3
ஊர் வரலாறு

அருப்புக்கோட்டையில் இருந்து திருச்சுழி செல்லும் சாலையில் குலசேகர நல்லூர் என்ற இந்த ஊர் அமைந்துள்ளது. இவ்வூரின் பழமையை எடுத்துக் காட்டும் வகையில் இங்கு சிவன்கோயில், பூமலர்த்த அம்மன் கோயில் மற்றும் முனியாண்டி கோயில் ஆகியவை அமைந்துள்ளன. இவ்வூர் முனியாண்டி கோயில் தூணில் உள்ள கல்வெட்டில் ’எம்மண்டலமும் கொண்டருளிய குலசேகர பாண்டியனின் 23ஆவது ஆட்சி ஆண்டு’ என்று பொறிக்கப்பட்டுள்ளது. இது இக்கோயிலுக்குத் தானம் வழங்கப்பட்ட செய்தியைத் தெரிவிக்கிறது. மன்னனின் பெயரால் இவ்வூருக்குப் பெயர் ஏற்பட்டது சிறப்பாகும். மேலும் பொது ஆண்டு 13ஆம் நூற்றாண்டுக்கு முன்பு இப்பகுதி காடுகள் நிறைந்த பகுதியாக இருந்ததால் இவ்விடம் ’காட்டுப் பொம்மைக் கோட்டை’ எனவும் அழைக்கப்பட்டதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். மேலும், நாயக்கர் காலத்திய நவகண்டச் சிற்பம் ஓன்று பூமலர்ந்த அம்மன் கோயில் அருகில் காணப்படுகிறது.

தகவல்

முனைவர் செல்லப்பாண்டியன்

புகைப்படங்கள்

முனைவர்.‌சி. செல்லப்பாண்டியன்

முனைவர்.‌சி. செல்லப்பாண்டியன்

முனைவர்.‌சி. செல்லப்பாண்டியன்